புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் போட்டியிட கூடிய அதிமுக வேட்பாளரும் அமைச்சருமான விஜயபாஸ்கருக்கு ஆதரவாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், வெற்றி வேட்பாளர் திரு விஜய பாஸ்கர் அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகிறோம். உங்களுடைய வேட்பாளர் விஜயபாஸ்கர் நன்கு அறிமுகமானவர். உள்ளத்திலே எளிமையாக பலரால் போற்றுவர். கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து தங்களுடைய பிரச்சினை தீர்க்கக் கூடிய சிறப்பான வேட்பாளர்.
இந்த வேட்பாளர் உங்களுக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட கொடையாக எண்ணி, விராலிமலை முருகன் எழுந்தருளிய இந்த பகுதியில் பேசி அவரை அறிமுகம் செய்ததில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். நம்முடைய விஜயபாஸ் அவர்கள் கொடுக்கின்ற பொறுப்பை சரியான முறையில் நிர்வாகம் செய்கிறார். சுகாதார துறைக்குப் பெருமை சேர்ப்பது மட்டுமல்ல,
நாட்டு மக்களுக்கு நன்மை செய்யக்கூடிய நல்ல இலாகா அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவருடைய இலாக்கா இன்றைக்கு தேசிய அளவில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தொடர்ந்து விருதுகளைப் பெற்று வருகின்றது. ஒரு துறை அமைச்சர் எப்படி செயல்படுவார் என்று சான்று, அவர் அந்தத் துறையில் கவனம் செலுத்தி வெற்றி பெறுவதற்கு மத்திய அரசாங்கமே சான்று கொடுத்திருக்கிறது.
கொரானா வைரஸ் தொற்று ஏற்பட்ட காலகட்டம், இன்றைக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதை பார்த்து பயந்து கொண்டு இருந்த காலகட்டத்தில் விஜய பாஸ்கர் மருத்துவமனையில் கொரானா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளை நேரடியாக சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் சொல்லி, அவர்களோடு மருத்துவ குழுக்களை அழைத்து சென்று சரியான சிகிச்சை கொடுக்க வேண்டும் என்று, அந்த நோயாளி மனம் குளிர்கின்ற அளவுக்கு, இந்த நாடே பாராட்டுகின்ற அளவுக்கு திறம்பட துறையை நிர்வாகித்த காரணத்தினால் இன்றைய தினம் தமிழகத்தில் கொரானா வைரஸ் பரவாது கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்திருக்கின்றன.
விஜயபாஸ்கர் அவர்கள் ஒவ்வொரு மாவட்டமாக சென்று, அந்தப் பகுதியில் நோய் எந்த அளவிற்கு பரவி இருக்கிறது ? அதை எப்படி கட்டுப்படுத்துவது ? அதற்கு தக்க ஆலோசனையை மருத்துவரிடத்தில் சொல்லி இன்றைக்கு நோய் பரவல் தமிழகத்தில் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது என்று சொன்னால் அவருடைய உழைப்பு பெரும் பங்கு வகிக்கிறது என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவரின் துறையில் மட்டுமல்ல… புதுக்கோட்டை மாவட்டம் சிறப்பு அடைவதற்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்திருக்கிறார். இந்த மாவட்ட மக்களுக்கு இன்றைக்கு உரிய சிகிச்சை கிடைக்க வேண்டும், மருத்துவகல்லூரி வேண்டுமென்று மாண்புமிகு அம்மா இருக்கும்போது குரல் கொடுத்தார். அதையும் இன்றைக்கு நிறைவேற்றி, அந்த மருத்து கல்லூரியோடு மருத்துவமனை
என்னை நேரடியாக அழைத்து வந்து திறக்க வைத்த பெருமை அவரைச் சாரும். தமிழகத்தில் பல் மருத்துவ கல்லூரி சென்னையில் தான் இருக்கிறது. பல் மருத்துவ கல்லூரியை அரசின் சார்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் திறக்க வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி, மத்திய அரசிடம் அனுமதி பெற்று, என்னிடத்தில் பலமுறை கோரிக்கை வைத்து அந்த கோரிக்கை நிறைவேற்றி இன்றைய தினம் புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசின் சார்பாக பல் மருத்துவ கல்லூரியை விரைவில் திறக்க இருக்கின்றோம். இவ்வளவு உங்களுக்கு செய்திருக்கிறார்கள் அதை எண்ணிப் பார்க்கவேண்டும் என தமிழக முதல்வர் பேசினார்.