வாட்ஸ் அப் புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலமாக இனி ஒருவருடன் நீங்கள் பேசும் சாட்டிங் தானாகவே டெலிட் ஆகிவிடும். இது ஒரு நாளைக்கு ஒரு முறை அல்லது ஒரு வாரத்திற்கு ஒரு முறை அல்லது 90 நாட்களுக்கு ஒருமுறை தானாகவே டெலிட் ஆகிவிடும். இதில் எதை வேண்டுமோ அதை நாம் தேர்வு செய்து கொள்ள முடியும். இது நமக்கு வேண்டியது இல்லை என்று எண்ணினால் அதனை ஆஃப் செய்து கொள்ளலாம்.
வாட்ஸ் அப்பில் மெசேஜ்கள் மறைந்துபோகும் அம்சத்தில் புதிய அப்டேட்டை மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி 7 நாட்களில் மெசேஜ்கள் மறைந்துவிடும். விருப்பம் மட்டுமே இருந்த நிலையில் இப்போது 24 மணி நேரம் அல்லது 90 நாட்களுக்கு பிறகு மெசேஜ்களை நீக்குவதற்கான விருப்பத்தை தேர்வு செய்து கொள்ளலாம். இது புதிய சாட்டிங்கு இருக்கும். ஏற்கனவே உள்ள சாட்டுகளை பாதிக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.