நடிகர் வடிவேல் தமிழ் திரைப்பட நடிகரும் பின்னணி பாடகரும் ஆவார். இவர் மதுரையைச் சேர்ந்தவர் 1988 ஆம் வருடம் டி ராஜேந்தர் இயக்கிய என் தங்கை கல்யாணி என்னும் திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் ஆகியுள்ளார். அதன் பிறகு வடிவேலு தனது அசாத்தியமான நகைச்சுவை கலந்த நடிப்பு திறமையால் வைகைப்புயல் எனும் பட பெயருடன் பரவலாக அறியப்பட்டார். நகைச்சுவை நடிகராக கொடிகட்டி பறந்த வடிவேலுவின் கைப்புள்ள, கீரிப்புள்ள, நேசமணி, வீரபாகு, வண்டு முருகன், ஸ்நேக் பாபு, புலிகேசி, வெடிமுத்து, அலர்ட் ஆறுமுகம், சூனா பானா போன்ற கதாபாத்திரங்கள் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது.
அதே போல ஆணியே புடுங்க வேண்டாம், இப்பவே கண்ண கட்டுதே, கிறுக்கன் ஆக்கிடுவாங்க போல இருக்கு, டூ வாட் ஐ சே, லாடன் பின் லேடன் என்றெல்லாம் அவர் பேசிய வசனங்களும் இன்றளவும் பார்ப்பவர்களை நகைச்சுவைக்க செய்கிறது. அப்படிப்பட்ட நகைச்சுவை நடிகரான வடிவேலு கடந்த ஐந்து வருடங்களாக திரையில் பார்க்க முடியாமல் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர். ஆனால் முகநூல், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற வலைதளங்களில் வடிவேல் மீம்ஸ் மையமாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் பிரச்சனைகள் முழுவதும் தீர்க்கப்பட்டு நாய் சேகர் ரிட்டன்ஸ் என்னும் படத்தின் மூலமாக மீண்டும் இரண்டாவது ரவுண்டை தொடங்கியுள்ளார். இதனை அடுத்து உதயநிதி மாமன்னன், ராகவா லாரன்ஸின் சந்திரமுகி இரண்டாம் பாகம் படங்களிலும் இவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தற்போது விஜய் சேதுபதியுடன் புதிய படத்தில் நடிக்கவும் இவருக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.