Categories
தேசிய செய்திகள்

அடடே இது நல்லா இருக்கே…! சும்மா இருப்பதற்கு சம்பளம்… இப்படியும் பிசினஸ் பண்ணலாமா…?

நல்ல சம்பளத்திற்கு வேலை கிடைப்பதே பெரிய சிரமம் ஆகிவிட்ட இந்த காலத்தில் எந்த வேலையும் செய்யாமல் சும்மா இருப்பதற்கு நல்ல சம்பளம் வாங்கிறார் வருகின் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஒருவர். ஜப்பான் தலைநகர் டோக்கியோவை சேர்ந்தவர் ஷோகி மொரிமோட்டோ என்பவர் வசித்து வருகிறார். இவர் எந்த வேலையும் செய்யாமல் சும்மா பணம் சம்பாதிக்க ஒரு ஐடியாவை கண்டுபிடித்து தொழிலை தொடங்கி லாபமும் சம்பாதித்து வருகின்றார் இவர் அப்படி என்ன தொழில் செய்கிறார்?. அதாவது இவருக்கு நண்பர்கள் இல்லை துணைக்கு ஆள் வேண்டும் ஜாலியாக ஊர் சுற்றுவதற்கு கம்பெனி வேண்டும் போன்றவர்கள் ஷோஜியை வாடகைக்கு அழைத்து செல்கின்றனர்.

இவரும் அவர்களுடன் ஊர் சுற்றுவது, ஷாப்பிங் செய்வது, உணவகங்களுக்கு செல்வது என ஜாலியாக இருக்கின்றார். இதற்காக வாடிக்கையாளர்களிடமிருந்து பணமும் வாங்கிக் கொள்கின்றார். கேட்பதற்கு நூதனமாக இருக்கலாம் ஆனால் இப்படித்தான் இவர் பணத்தை சம்பாதிக்கின்றார். அதுவும் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 5600 சம்பளம் வாங்குகின்றார் என்றால் பிசினஸ் எப்படி போகிறது என்பதை கவனியுங்கள். கடந்த நான்கு வருடங்களில் மட்டும் 4000 முறை இதுபோல சேவை வழங்கி இருப்பதாக இவர் தெரிவித்துள்ளார். ஷோஜியை சமூக வலைத்தளங்களில் லட்சக்கணக்கானவர்கள் பின் தொடர்ந்து வருகின்றார்கள். இவர்கள்தான் இவர்களுக்கு வாடிக்கையாளர்களாக பெரும்பாலும் வருகின்றார்கள். அதில் குறிப்பிட்ட ஒருவர் மட்டுமே ஷோஜியை 270 தடவை வாடகைக்கு அழைத்து சென்றிருக்கின்றார். மேலும் தினமும் குறைந்தது ஒன்று அல்லது இரண்டு வாடிக்கையாளர்கள் வருகின்றனர் என்கின்றார் ஷோஜி.

Categories

Tech |