Categories
மாவட்ட செய்திகள்

அடடே இது அல்லவா பாசம்…. தாய், தந்தைக்கு கோவில் கட்டி கெடா விருந்து வைத்த மகன்…. நெகிழ வைத்த சம்பவம்….!!!

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள தீபாலப்பட்டியில் ரமேஷ் என்பவர் வசித்துவருகிறார். இவர் கட்டுமான தொழில் செய்து வருகிறார். இவருடைய தந்தை மாரிமுத்து. இவர் விவசாயி. தாய் பாக்கியம். இவர்கள் இருவரும் இறந்து 10 ஆண்டுகள் ஆகிறது. இவர் தாய் தந்தை இருவருக்கும் சிலை வடிவமைத்து ஆண்டு தோறும் விழா நடத்திய நடத்தி வருகிறார். இந்நிலையில் தாய் தந்தைக்கு மூன்றாவது நினைவு தினத்தை முன்னிட்டு விழா நடத்தினார்.

இந்த விழாவிற்காக தீபாலப்பட்டி ஊர் மக்கள் அனைவரையும் வரவழைக்கப்பட்டது. அதன் பிறகு இந்த விழாவில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு கெடா விருந்து வைத்துள்ளார். இந்தக் காலத்தில் வயதான பெற்றோர்களை பார்த்துக் கொள்ளாமல் பலர் ஒதுக்கி வைக்கின்றனர். ஆனால் இவர் இறந்து போன தனது தாய் தந்தைக்கு விழா நடத்தியது அப்பகுதியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |