சொத்துக்கள் ஏலம் மூலம் 844 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புதுடெல்லியில் உள்ள ரயில்வே வளாகங்களில் விளம்பரம் செய்தல், வாகன நிறுத்துமிடம், பார்சல் இடம் மற்றும் கட்டண கழிவறைகள் ஆகியவற்றை ஆன்லைன் மூலம் ஏலத்தில் விட ரயில்வே முடிவு செய்தது. அதற்காக சிறிய தொழில் முனைவோர் மற்றும் ஸ்டார்ட்ஆப் நிறுவனங்களை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த பணியை கடந்த ஜூன் மாதம் ரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தொடங்கி வைத்தார். இந்நிலையில் கடந்த 3 மாதத்தில் இந்த ஏலத்தின் மூலம் 844 கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது.
மேலும் இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது. 68 மண்டலங்களில் மேற்கொள்ளப்பட்ட 8,500 சொத்துக்கள் தொடர்பான 1,200 ஒப்பந்தங்கள் மூலம் இந்த வருவாய் கிடைத்துள்ளது. அதில் ரயில் நிலைய சுற்று வட்டாரங்கள் மற்றும் ரயில்வே பெட்டிகள் விளம்பரம் செய்வதற்காக 155 கோடியும், வாகன நிறுத்துமிடம் குத்தகை மூலம் 226 கோடியும், பார்சல் இடம் குத்தகை மூலம் 385 கோடியும், கட்டண கழிப்பிடம் மூலம் 78 கோடியும் கிடைத்துள்ளதாக கூறியுள்ளனர்.