Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

அடடா…. ரூ.10 கோடி கோவில் நிலம் மீட்பு… வெளியான சூப்பர் தகவல்…!!!

திருப்பூர் மாவட்டத்தில் காங்கயம் வட்டமலை முத்துக்குமாரசாமி கோவில் இந்து சமய அறநிலைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவிலாகும். இந்த கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பதாரர்களிடம் இருந்து வந்தது. இந்த நிலங்கள் அனைத்தும் வருவாய் துறை ஆவணங்களில் கோவில் பெயரில் இருந்தது .அதனை தொடர்ந்து இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையாளரான குமரத்துரை உத்தரவின்படி நேற்று ஆக்கிரமிப்புத்தாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, மொத்தம் 53 ஏக்கர் 97 சென்ட் நிலம் மீட்கப்பட்டது. இதில் கோவில் உதவியாளர் விமலா, இந்து சமய அறநிலைத்துறை உதவியாளர் செல்வராஜ், கோவில் தாசில்தார் சுப்பிரமணியம் மற்றும் கோவில் பணியாளர்கள் முன்னிலையில் நிலங்கள் கோவில் வசம் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் மீட்கப்பட்ட நிலத்தின் மொத்த மதிப்பு ரூ.10 கோடியாகும்.

Categories

Tech |