Categories
சினிமா

அடடா யாருப்பா இது?… நம்ம தளபதியா!…. க்யூட்டாக குழல் ஊதும் குட்டி விஜய்…… வைரல் புகைப்படம்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கி உள்ளார். பீஸ்ட் படத்தின் வெற்றியே தொடர்ந்து தோழா உள்ளிட்ட படங்களை இயக்கிய வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இப்படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தானா நடித்து வருகிறார். இப்படத்தில் சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஷாம், ஸ்ரீகாந்த், ஜெயசுதா, சங்கீதா, சம்யுக்தா பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தன்னுடைய தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷனல் சார்பாக தயாரிக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நேற்று நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட்டது. அப்போது நடிகர் விஜயின் சிறு வயது போட்டோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த பிளாக் அண்ட் வொயிட் போட்டோவில் நடிகர் விஜய் புல்லாங்குழலே கையில் ஏந்திய படி போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோவை ஷேர் செய்தவர்கள் இது தளபதியா? இல்ல தலையா? யாருப்பா இது!.. இந்த போட்டோவை ஷேர் செய்து கேள்வி கேட்டு அவரே ஹாஸ்டேக் தளபதி என பதிலும் அளித்துள்ளார். இந்த புகைப்படம் ஆண்டுக்கு ஒரு முறை கொண்டாடப்படும் கிருஷ்ண ஜெயந்திக்கு மட்டுமே வைரலாகி வருகிறது. அதனைத் தொடர்ந்து இந்த படம் ஏதோ எடிட் செய்வது போல இருக்கிறது. இப்படி ஏதாவது செய்து நடிகர் விஜய் பேசு பொருளாக மாற்றும் விஜய் ரசிகர்களை நினைத்தால் சற்று வேடிக்கையாக தான் உள்ளது என்று பலரும் கேலி செய்து வருகின்றனர்.

Image

Categories

Tech |