Categories
உலக செய்திகள்

அடடா என்ன அதிசயம்…. அழிந்து வரும் பவளப்பாறைகளை மீட்டெடுக்கும் முயற்சி…. களமிறங்கிய பிரபல நாட்டு விஞ்ஞானிகள்….!!

அமெரிக்க விஞ்ஞானிகள் அழிந்து வரும் பவளப் பாறைகளை மீண்டும் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அமெரிக்காவில் புளோரிடா என்ற மாநில கடல் பகுதியில் பவள பூச்சிகளை தாக்கிய புதிய வகை நோயால் பவளப்பாறைகள் நிறமிழந்து பவள பூச்சிகளின் ஆயுட்காலமும் குறைந்து காணப்படுகிறது. மேலும் நோயுற்ற பவளப் பூச்சிகள் இனப்பெருக்கத்தில் ஈடுபடுவதை தவிர்த்துள்ளதால் பவளப்பாறைகளின் பரப்பளவு சுருங்கி காணப்படுகிறது.

இதனால் அவற்றை மீண்டும் உருவாக்கும் முயற்சியில் களமிறங்கிய விஞ்ஞானிகள் கற்றாழை இன பவள பூச்சிகளை  இனப்பெருக்கம் செய்யும் புதிய முயற்சியில் வெற்றி கண்டனர். மேலும் அவற்றை பவளப் பாறைகள் மீது விட்டு இனப்பெருக்கத்திற்கு தூண்டுவதன் மூலம் பவளப்பாறைகளின் பரப்பளவை பெருக்குவதற்கு விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்

Categories

Tech |