Categories
சினிமா தமிழ் சினிமா

அடடா….! “எஃப்.ஐ.ஆர் படத்திற்கு வந்த சோதனையை பாத்திங்களா”?…. அதிர்ச்சியில் படக்குழுவினர்….!!!

நடிகர் விஷ்ணு விஷால் நடித்த எஃப்.ஐ.ஆர் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தியேட்டர்களில் எஃப்.ஐ.ஆர் படம் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் விஷ்ணு விஷால் ஹீரோவாக நடித்திருக்கிறார். தற்போது  எஃப்.ஐ.ஆர் படத்திற்கு மலேசியா, குவைத் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளில் சென்சார் போர்டு அனுமதி கிடைக்காததால் அங்கு வெளியாகவில்லை. மேலும் எஃப்.ஐ.ஆர் படத்திற்கு தெலுங்கானாவில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் AIMIM என்ற  கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ-க்கள் Cinematography மினிஸ்டர் தலசனி ஸ்ரீநிவாஸ் யாதவை சந்தித்து எஃப்.ஐ.ஆர் படத்தை பற்றி புகார் அளித்திருக்கின்றனர்.

மேலும் இப்படத்தின் போஸ்டரில் Shahadah என்பது இடம் பெற்றிருப்பதனால், அது இஸ்லாமியர்களின் சென்டிமென்ட்டை புண்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது என குறிப்பிட்டுள்ளனர். இக்காரணத்தினால் அதை நீக்க தெலுங்கானா சினிமா Act 1955  படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.

Categories

Tech |