பீகார் மாநிலத்தில் சீமா என்ற மாணவி சில வருடங்களுக்கு முன்பு திடீரென ஏற்பட்ட விபத்தில் தனது ஒரு காலை இழந்துள்ளார். இந்த நிலையில் அந்த மாணவி யார் துணையும் இல்லாமல் ஒற்றைக்காலில் குதித்து குதித்து பள்ளிக்குச் சென்று வருகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனை அறிந்து மாணவிக்கு உதவ பலர் முன் வந்துள்ளனர். ஒற்றைக் காலை இழந்தாலும் தன்னம்பிக்கையை இழக்காத அந்தப் பத்து வயது சிறுமி, தனது வீட்டிலிருந்து பள்ளி வரை சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் ஒற்றைக்காலில் உதித்து சென்று வருகிறார். அந்த சிறுமியின் நான்காம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் அம்மாவட்ட ஆட்சியர் சிறுமியின் வீட்டிற்குச் சென்று ஒரு மூன்று சக்கர வண்டியை பரிசாக அளித்து சிறுமியை பாராட்டி ஊக்கப்படுத்தினார். அதுமட்டுமல்லாமல் சிறுமிக்கு செயற்கை கால் பெற்று தருவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார். மிகவும் வறுமையில் வாடும் குடும்பத்தை சேர்ந்த அந்த சிறுமி எதிர்காலத்தில் தான் ஒரு ஆசிரியராக வேண்டும் என்ற கனவை கைவிடவில்லை. அவரது மன உறுதியை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் முதல் நடிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
हमें गर्व है कि हमारे प्रदेश के बच्चे शिक्षा के प्रति जागरूक हो रहे हैं, सभी बाधाओं को पार कर शिक्षा ग्रहण कर रहे हैं।
सीमा एवं उसके जैसे हर बच्चे को चिन्हित कर उन्हें यथोचित सहायता मुहैया करवाई जायेगी। बहरहाल बिटिया तक जरूरी मदद पहुंचाई गई है। @NitishKumar @Jduonline #Bihar pic.twitter.com/PidkCvrQZN
— Dr. Ashok Choudhary (@AshokChoudhaary) May 25, 2022