செய்தியாளர்களை சந்தித்த சீமான், எங்களுக்கு போராடவேண்டும் எண்ணம் வரவே கூடாது என்று நினைக்கிறார்கள். புலி என்னவென்றால் ஒரு உணர்வு என்று தெரிந்து கொள்ள வேண்டும். கண் முன்னாடி என் தங்கை வன்முறைவு செய்து கொலை செய்யப்படுவது, வீடு இடிப்பது, அம்மாவை கொலை செய்வது, அதை பார்க்கும்போது அடக்கமுடியாத ஒரு கோபம் வருகிறது அல்லவா அந்த உணர்வுக்குப் பெயர் தான் புலி.அதை இவர்கள் புரிந்து கொள்ளாமல் பேசுகிறார்கள்.
என் தங்கை, என் தம்பி, அம்மா, பெரியம்மா இறந்து கிடக்கும் போது எனக்கு கோபம் வருகிறது, இதை எந்த சட்டம் கொண்டு தடுப்பார்கள். நீங்கள் என்னுடைய நடவடிக்கையை தடுக்க முடியும், என்னுடைய செயல்பாடுகளை தடுக்க முடியும், என் பேச்சுக்கு தடை போட முடியும், என் கனவுக்கு, சிந்தனை கனவுக்கு எந்த நாட்டில் சட்டம் இருக்கிறது. அதற்கு எப்படி தடை போட முடியும்.
அப்படிப்பார்த்தால் உலகமெங்கும் தன்மானத்தோடு இனமானத்தோடு வாழ்கின்ற ஒவ்வொரு தமிழ் மகனும் புலிதான். ஒருவேளை நான் வந்து தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆகிவிட்டேன்…. இந்த மாதிரி நடவடிக்கை எல்லாம் செய்வாயா ? அதற்கான சரியான ஆள் இல்லை… ஆள் இருக்கிற அரசு இந்த உணர்வோடு இருக்கிற அரசாக இல்லை, அதுதான் இங்கே இருக்கக்கூடிய சிக்கல் அதை புரிந்துகொள்ள வேண்டும். அதனால் எங்கள் மீனவனை கை வைப்பது, படகை பறித்துக் கொள்வது, வலையை பறித்துக் கொள்வது இந்த சேட்டைகளை எல்லாம் காட்டுவதற்கு காரணம், இந்த அரசு அடிமை அரசாக இருக்கிறது, எங்களுக்கான அரசாக இல்லை, அதுதான் சிக்கல் என சீமான் தெரிவித்தார்.