நாடு முழுவதிலும் நேற்று 73-வது குடியரசு தின விழாவானது கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதன்படி கேரள மாநிலமான காசர்கோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் அமைச்சரான அகமது தேவர்கோவில் தேசியக்கொடியை ஏற்றி மரியாதை செலுத்தியுள்ளார். இந்நிலையில் தேசியக்கொடி தலைகீழாக ஏற்றப்பட்டு இருந்ததை பார்த்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து உடனே தேசியக்கொடி கீழே இறக்கப்பட்டு, சரி செய்து மீண்டும் நேராக ஏற்றப்பட்டது.
இதனிடையில் தேசியக்கொடியை தலைகீழாக ஏற்றியது குறித்து காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டனத்தை தெரிவிக்கின்றனர். இவ்வாறு தேசியக்கொடி தலைகீழாக கட்டப்பட்டு இருந்தது எப்படி…? என உரிய விசாரணை நடத்த நீதிபதி மற்றும் போலீஸ் சூப்பிரண்டுக்கு மாவட்ட அமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது