கர்ப்பிணி மனைவியை தள்ளுவண்டியில் வைத்து கணவர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள தமோ மாவட்டத்தில் ரானே என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனையில் சேர்ப்பதற்காக கர்ப்பிணியின் கணவர் 108 ஆம்புலன்ஸ்-க்கு போன் செய்தார். ஆனால் 2 மணி நேரம் ஆகியும் ஆம்புலன்ஸ் வராததால் வேறு வழியின்றி தன்னுடைய மனைவியை ஒரு தள்ளுவண்டியில் வைத்து ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஒரு கிலோமீட்டர் தூரம் வரை தள்ளிக் கொண்டே சென்றுள்ளார். ஆனால் அங்கு மருத்துவர் மற்றும் டாக்டர்கள் இல்லாத காரணத்தினால் ஆம்புலன்ஸில் ஹட்டா பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
இந்த மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்ணுக்கு சரியான முறையில் சிகிச்சை வழங்கப் படாததால் தமோ மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைக்கு கர்ப்பிணி மாற்றப்பட்டார். அங்கு கர்ப்பிணி பெண் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்கிறார். இந்நிலையில் தன்னுடைய மனைவியை கணவர் தள்ளு வண்டியில் வைத்து தள்ளி சென்று வீடியோவானது இணையதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக மாவட்ட சுகாதார அதிகாரிகள் விசாரணை நடத்துவதற்கு உத்தரவிட்டுள்ளனர்.