அடையாளம் தெரியாத தனி நபர் ஒருவர் பொதுமக்களின் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
இஸ்ரேல் நாட்டின் தலைநகரான டெல் அவிவ் நகரில் பினெய் ப்ராக் எனும் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் தனிநபர் ஒருவர் பைக்கில் சென்று கொண்டிருந்த போது, திடீரென தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அங்குள்ள மக்களின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இந்த தாக்குதலில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இதனை அடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அதே இடத்தில் தாக்குதல் நடத்திய நபரை சுட்டுக் கொன்றுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து ரமலான் மாதம் நெருங்கி வரும் நிலையில், அங்குள்ள கிளர்ச்சியாளர்கள் குழு இந்த தாக்குதலில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என யூகிக்கப்படுகிறது. இதே போன்று ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 போலீஸ்காரர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.