வாலிபர் ஒருவர் மணப்பெண் திட்டியதால் திருமணத்தை நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அசாம் மாநிலத்தில் உள்ள கவுகாத்தி பகுதியில் இன்ஜினியராக வேலை பார்க்கும் வாலிபர் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் செய்ய அவரது பெற்றோர் ஒரு பெண்ணை பார்த்து முடிவு செய்துள்ளனர். இன்னும் 2 நாட்களில் இவர்களுக்கு திருமணம் நடைபெற இருந்தது. அதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்றது. இந்நிலையில் மாப்பிள்ளை மணப்பெண்ணுக்கு சன்சில்க் ஷாம்பூ உள்ளிட்ட பல அழகு சாதன பொருட்களை வாங்கி கொடுத்துள்ளார். இதனை பார்த்த அந்த பெண் தரம் குறைந்த பொருட்களை தனக்கு பரிசாக அளித்ததாகவும், காஸ்ட்லி பொருட்களை வாங்கித் தரும் அளவுக்கு உங்களுக்கு வருமானம் இல்லையா என whatsapp மெசேஜ் மூலம் அந்த வாலிபரிடம் கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த வாலிபர் திருமணத்தை நிறுத்தியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி பெண்ணின் பெற்றோர் மாப்பிள்ளையை திருமணத்திற்கு சம்மதிக்க வைக்க எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தது. மேலும் இது குறித்து அந்தப் பெண் காவல் நிலையத்தில் வாலிபர் தன்னை ஏமாற்றி விட்டதாக புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் ஒரு சன்சில்க் ஷாம்பு ஒரு திருமணத்தையே நிறுத்திய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.