Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…! விடிய விடிய…. “கொட்டும் பனியில்”… குரங்குடன் போலீஸ்…. என்னன்னு பாருங்க…!!

அமெரிக்காவில் லாரி ஒன்று மற்றொரு வாகனத்தின் மீது மோதிய விபத்தில் அதிலிருந்து தப்பி சென்ற 4 ஆய்வுகூட குரங்குகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் உறைப்பனியை கூட பொருட்படுத்தாமல் தேடி அழைந்துள்ளார்கள்.

அமெரிக்காவில் லாரி ஒன்று மற்றொரு வாகனத்தின் மீது மோதிய விபத்தில் அதிலிருந்த நூற்றுக்கணக்கான ஆய்வுகூட குரங்குகளில் 4 அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.

இந்த குரங்குகள் மருத்துவ ஆராய்ச்சிக்கு பயன்படுத்தப்படுவதால் அதன் அருகே எவரும் செல்ல வேண்டாம் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளார்கள். இதனையடுத்து போலீசார் 1 குரங்கை தப்பிய அடுத்த நொடியே பிடித்துள்ளார்கள்.

இருப்பினும் மற்ற 3 குரங்குகள் அங்கிருந்து தப்பிச் சென்ற நிலையில் அதனை காவல்துறை அதிகாரிகள் கடும் பனியைக் கூட பொருட்படுத்தாமல் ஹெலிகாப்டர் உதவியுடன் விடிய விடிய தேடியுள்ளார்கள்.

Categories

Tech |