சீனாவில் கடந்த சில தினங்களாகவே அதிகரித்துவரும் ஓமிக்ரான் தொற்றால் 5280 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
சீனாவில் கடந்த சில தினங்களாகவே தற்போது உலகையே ஆட்டிப் படைத்து வரும் ஓமிக்ரான் தொற்று அதிகமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் மார்ச் 14 ஆம் தேதி மட்டும் சீனாவில் ஓமிக்ரான் தொற்றால் 5280 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இதனால் சீனாவின் பல பகுதிகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஹென்சன் மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மிக கடுமையான ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அங்கு வசித்து வரும் 1.7 கோடிக்கும் அதிகமான மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளார்கள்.