Categories
தேசிய செய்திகள்

“அடக்கடவுளே!”…. மத்திய அரசின் முடிவால்…. மீண்டும் 144 தடை உத்தரவு?…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

மத்திய அரசு புதுச்சேரி மின்துறையை தனியார் மயமாக்க முடிவு செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் கட்சிகளும், மின்துறை ஊழியர் சங்கங்களும், மின்துறை ஊழியர்களும், அதிகாரிகளும் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் குடிநீர் வினியோகம், மின் பராமரிப்பு மற்றும் மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மாநில அரசு மின் துறை ஊழியர்களின் போராட்டத்தை தடுப்பதற்காக 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. அதோடு மட்டுமில்லாமல் மின் துறை நிர்வாகம் போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

இருப்பினும் 500-க்கும் மேற்பட்ட மின்துறை ஊழியர்கள் 144 தடையை மீறி மத்திய அரசை கண்டித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மின்துறை அருகே பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே கேரளா, ஆந்திரா, தமிழகம் உள்ளிட்ட மின் துறையை சேர்ந்த ஊழியர்களும் புதுவை மின்துறை ஊழியர்களுக்கு தங்களுடைய ஆதரவை தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |