Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே… பேருந்திற்குள் விளக்கேற்றி தீபாவளி கொண்டாடிய ஓட்டுநர்…2 பேர் தீயில் கருகி பலி… பெரும் சோகம்…!!!!!

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி அருகே வாகனம் நிற்கும் இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்து ஒன்று திடீரென தீப்பிடித்து எறிந்ததால் அதிலிருந்து இரண்டு பேர் உடல் கருகி பலியான சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த விசாரணையில் அவர்கள் பேருந்துக்குள் விளக்குகளையும், மெழுகுவர்த்தியையும் ஏற்றி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விளக்குகளும் மெழுகுவர்த்தியும் ஏற்றப்பட்டு இருப்பதால் பேருந்துக்குள் தீப்பிடித்ததாகவும் இதில் பேருந்துக்குள் உறங்கிக் கொண்டிருந்த மதன் மஹ்தோ(50), இப்ராஹிம் (25) ஆகிய இரண்டு பேரும் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு ஒரு மணிக்கு நடைபெற்றுள்ளது.

இந்த தீ பயங்கரமாக பற்றி எரிந்ததால் அதற்குள் சிக்கியவர்களை மீட்க முடியாமல் போனதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் அருகில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்தின் ஓட்டுநர்கள் தீ பற்றிய பேருந்தில் இருந்து சிக்கியவர்களை மீட்க எவ்வளவோ முயற்சி செய்தும் அவர்களால் மீட்க முடியவில்லை. பேருந்திற்குள் விளக்குகள் மற்றும் மெழுகுவர்த்திகளை ஏற்றிவிட்டு ஓட்டுநரும் உதவியாளரும் பூஜைகளை செய்துவிட்டு கதவு, ஜன்னல்களை பூட்டிவிட்டு உறங்கி விட்டனர் இருவரும் போதையில் இருந்ததால் தான் பேருந்திற்குள் தீப்பற்றியதும் அவர்களால் உணர முடியவில்லை எனவும் கூறப்படுகிறது.

Categories

Tech |