இலங்கையில் பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகிறது.
இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சர்வதேச நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாயின் மதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. மேலும் எரிபொருள் பற்றாக்குறை மட்டுமல்லாமல் மின்வெட்டும் பெரிய பிரச்சனையாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தாள்கள் தட்டுப்பாடு காரணமாக பள்ளி மாணவர்களுக்கு நடைபெற இருந்த தேர்வுகள் ரத்து செய்யப்படுகிறது.
இதற்கு காரணம் நிதி பற்றா குறையால் தாள்கள் அச்சிடவும், இறக்குமதி செய்யவும் அந்நாட்டு அரசு திணறி வருகிறது. இது குறித்து இலங்கை நாட்டு கல்வித்துறை அமைச்சகம் கூறியதாவது “தாள்கள் தட்டுப்பாடு காரணமாக இலங்கையில் லட்சக்கணக்கான மாணவர்களுக்கு அடுத்த வாரம் நடைபெறவிருந்த தேர்வுகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுகிறது” என தெரிவித்துள்ளது.