Categories
தென்காசி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அடக்கடவுளே…! புதிய கலெக்டரை வாழ்த்த வந்த….. கல்வி அலுவலர் திடீர் மரணம்…. பெரும் அதிர்ச்சி….!!!!!

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சங்கரன்கோவில் கல்வி அலுவலர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்ட புதிய ஆட்சியாளராக ஆகாஷ் பொறுப்பேற்றார். இதனை அடுத்து உயரதிகாரிகள் பலர் புதிய ஆட்சியரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

அந்தவகையில் சங்கரன்கோவில் கல்வி அலுவலர் சுப்பிரமணியன் தென்காசி மாவட்ட ஆட்சியரை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க வந்த போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனையடுத்து அவர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். இதனால் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |