பிரபல இசை பாடகர் டேக் ஆப் மர்ம நபர்களால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்க நாட்டில் மிகவும் பிரபலமான இசை பாடகராக இருந்தவர் டேக் ஆப். இவர் சிலருடன் சேர்ந்து பகடைக்காய் விளையாட்டில் ஈடுபட்டுள்ளார். அப்போது திடீரென அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் சிலர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் டேக் ஆப்பின் தலை மற்றும் கழுத்தின் பக்கத்தில் குண்டு பாய்ந்து உள்ளது.
இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் அந்த இடத்தில் 50-க்கும் மேற்பட்டோர் இருந்துள்ளனர். இந்த தாக்குதலில் மேலும் 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் லாரன்ஸ்வில்லே பகுதியில் பிறந்த டேக் அப் கடந்து 2008-ஆம் ஆண்டு ராப் இசையில் தனது மாமாவுடன் தன்னை இணைத்துக் கொண்டார். பின்னர் 2011-ஆம் ஆண்டு இந்தக் குழுவினர் மிகோஸ் என்ற பெயரில் ராப் இசைக் குழுவை தொடங்கினர்.