பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரிலிருந்து அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணம் ஹூஸ்டன் நகருக்கு யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம் சென்று கொண்டிருந்தது. இது மெக்சிகோவில் உள்ள கான்கன் நகருக்கு மேலே நடு வானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென நிலை தடுமாறியதில் பயணிகள் பீதியடைந்துள்ளனர்.
இந்நிலையில் விமானம் நிலை தடுமாறியதில் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அதன் பின் இயல்பு நிலை திரும்பியவுடன் விமானம் ஹூஸ்டன் நகரை நோக்கி தொடர்ந்து பயணம் செய்தது. இதனையடுத்து ஹூஸ்டன் நகர விமான நிலையத்தில் தரை இறங்கியவுடன் படுகாயம் அடைந்திருந்த ஐந்து பேரையும் அங்கு தயார் நிலையில் இருந்த மருத்துவ குழு மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.