ரஷ்யாவின்Mi-28 ஹெலிகாப்டரை உக்ரைன் ராணுவம் சுட்டு வீழ்த்திய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
உக்ரைன் மீது தொடர்ந்து 37வது நாளாக படை எடுத்து வரும் ரஷ்யா, அந்நாட்டின் தலைநகர் கீவ் அருகே தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளதாக நகர மேயர் கூறியுள்ளார். இந்நிலையில் இன்று காலைLuhansk-ல் ரஷ்ய ஹெலிகாப்டரை உக்ரைன் ராணுவம் படையினர் சுட்டு வீழ்த்தி இருக்கிறார்கள்.
Luhansk-ல் உள்ள Holubivka கிராம வான்வெளியில் குறித்த ரஷ்ய ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.அந்த வீடியோவில் வான்வெளியில் பறந்து செல்லும் ரஷ்ய ஹெலிகாப்டரை பின்பக்கமாக ஏவுகணை ஒன்று தாக்குகிறது. இதனை தொடர்ந்து தீப்பற்றி ஹெலிகாப்டர் தரையில் விழுந்து விபத்துக்குள்ளாகி இருக்கிறது. ஹெலிகாப்டரில் பயணித்தவர்களின் நிலை குறித்து தற்போது வரை எந்தவிதமான தகவலும் வெளியாகவில்லை என கூறப்பட்டுள்ளது.