Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…! திடீரென அதிகரித்த வாயு…. தொழிலாளர்களுக்கு நேர்ந்த சோகம்…. அரசு வெளியிட்ட முக்கிய தகவல்….!!

செர்பியாவிலுள்ள சுரங்கத்தினுள் மீத்தேன் வாயுவின் அளவு திடீரென அதிகரித்ததால் அதில் பணிபுரிந்து வந்த 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள்.

செர்பியாவிலுள்ள சோக்கோபஞ்சா என்ற நகரிலிருக்கும் சுரங்கத்தில் சுமார் 49 தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இந்நிலையில் இந்த சுரங்கத்தினுள் தொழிலாளர்கள் பணிபுரிந்து கொண்டிருந்த வேளையில் திடீரென அதனுள் மீத்தேன் வாயுவின் அளவு அதிகரித்துள்ளது.

இதனால் அதில் பணிபுரிந்து வந்த 8 பேர் மூச்சுத்திணறி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்கள். இதில் சிக்கிய 20 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக செர்பிய அரசு தெரிவித்துள்ளது.

Categories

Tech |