வடகொரியாவில் 1.34 லட்சம் பேருக்கு மட்டுமே கொரோனா அறிகுறி கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
வடகொரியா நாட்டில் கொரோனா தொற்று பரவுவதை அந்நாட்டின் தலைவர் கிம் ஜாங் உன் கடந்த 12-ஆம் தேதி உறுதிப்படுத்தியுள்ளார். இதனையடுத்து ஊரடங்கு பொதுமுடக்கத்தையும் அறிவித்துள்ளர். கோவிட் தடுப்பூசி நுழைந்திடாத அந்த நாட்டுக்கு கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அமெரிக்காவும், தென்கொரியாவும் முன் வந்தன. இந்நிலையில் இந்தத் தொற்று பற்றி வெளிப்படையாக கருத்து கூறாத வடகொரியா, தற்போது நோயை கட்டுப்படுத்துவதில் முன்னேற்றம் கண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. அதே சமயத்தில் தடுப்பூசியின் செயல்திறன் பற்றி கேள்வி எழுப்பி உள்ளது.
இதனைத் தொடர்ந்து வடகொரிய மந்திரிசபை நடத்துகிற பத்திரிகையில் கூறியதாவது, “கொரோனாவுக்கு எதிராக மருந்து கம்பெனிகள் தடுப்பூசிகளை உருவாக்குகின்றன. பல சிகிச்சைகளை உருவாக்கி உள்ளனர். ஆனால் அவற்றின் உலகளாவிய பயன்பாடு கேள்விகளை எழுப்புகிறது” என அவர் கூறியுள்ளார். மேலும் தினந்தோறும் கொரோனா அறிகுறி 2 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு பரவி வருகிறது. குறிப்பாக நேற்று 1.34 லட்சம் பேருக்கு மட்டுமே அறிகுறி கண்டறியப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.