சிறுமியை 50 வயது முதியவர் திருமணம் செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ஹர்லா பகுதியை சேர்ந்த ஒரு பெண் அதே பகுதியில் அமைந்துள்ள வங்கிக்கு கடன் வாங்குவதற்காக சென்றுள்ளார். ஆனால் வங்கி அதிகாரிகள் கடன் வழங்கவில்லை. அப்போது அந்த பெண்ணை சந்தித்த சஞ்சய் பெஸ்ரா என்ற 50 வயது முதியவர் தான் கடன் தருவதாக கூறியுள்ளார். மேலும் அந்த பெண் கேட்ட தொகையையும் கொடுத்துள்ளார். ஆனால் அந்த பெண்ணால் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியவில்லை. இதனால் சஞ்சய் பெஸ்ரா பெண்ணின் வீட்டிற்கு போலீஸ் சீருடையில் சென்று தனது பணத்தை திரும்ப கேட்டுள்ளார். இதனால் பயந்து போன அந்த பெண்ணின் குடும்பத்தினர் அவருக்கு மரியாதை கொடுத்து உபசரித்துள்ளனர். மேலும் கடனை கொடுக்க முடியாததால் தனது மகளை அவருக்கு திருமணம் செய்து கொடுப்பதாக கூறியுள்ளனர்.
இன்று திருமண சடங்குகள் நடைபெற்றது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் சிறுமிக்கு திருமணம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். ஆனால் போலீசாரை பார்த்ததும் சஞ்சய் பெஸ்ரா அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் சஞ்சய் பெஸ்ரா தனது மதத்தின் பெயரை மாற்றி திருமணம் செய்து கொள்ள முயன்றதும், இதுபோல பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்ததும் தெரியவந்துள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.