Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…! கொள்ளையர்களின் அட்டகாசம்…. கொன்று குவிக்கப்பட்ட அப்பாவி மக்கள்…. பிரபல நாட்டை உலுக்கிய சம்பவம்….!!

நைஜீரியாவிலுள்ள 4 கிராமங்களுக்குள் அதி பயங்கர ஆயுதங்களுடன் புகுந்த கொள்ளை கும்பல் அங்கிருந்த சுமார் 70 பேரை கொன்று குவித்துள்ளார்கள்.

நைஜீரியாவில் பிளாடீயூவின் என்ற மாநிலம் அமைந்துள்ளது. இந்த மாநிலத்தின் தலைநகரிலுள்ள 4 கிராமங்களுக்குள் அதி பயங்கர ஆயுதங்களுடன் நள்ளிரவில் கொள்ளை கும்பல் புகுந்துள்ளது. அவ்வாறு புகுந்த கொள்ளையர்கள் கிராமங்களில் இருந்த வீடுகளுக்குள் சென்று பெண்கள், சிறுவர்கள் உட்பட அனைவரையும் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார்கள்.

அதன் பின்பு அவர்களது வீடுகளுக்குள் புகுந்து பணம், பொருட்கள் என அனைத்தையும் கொள்ளையடித்து சென்றுள்ளார்கள். இந்த கொடூர தாக்குதலில் சுமார் 70 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள். அதுமட்டுமின்றி துப்பாக்கி முனையில் அப்பாவி பொதுமக்களை பலரையும் கொள்ளையர்கள் கடத்திச் சென்றுள்ளார்கள்.

Categories

Tech |