கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள திருவள்ளுவர் பேருந்து நிலையம் முன்பு சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் பெட்டிக்கடை ஒன்றை நடத்தி வருகின்றார். இவரது கடையில் கதவு இல்லாத காரணத்தினால் இரவு நேரத்தில் தார்பாலினால் கதவை மூடி வைத்துவிட்டு கடைக்குள்ளே உறங்குவது வழக்கமாகும். இதே போல் கடையில் செந்தில் குமாரின் மகன் செல்வ சிவா தந்தைக்கு உதவியாக இருந்திருக்கின்றார். இந்த நிலையில் சம்பவத்தன்று நள்ளிரவு 2 மணி அளவில் தார்ப்பாலினை திறந்து உள்ளே வந்த சிவகங்கை மாவட்ட கீதகாதியை சேர்ந்த முகமது ஆஷிக் என்பவர் சிவ செல்வத்தை எழுப்பி சிகரெட் வேண்டும் என கேட்டு இருக்கின்றார்.
அதற்கு செல்வ சிவா நான்கு சிகரெட்களை கொடுத்துவிட்டு 54 ரூபாய் பணம் கேட்டு இருக்கின்றார். அப்போது மது போதையில் இருந்த ஆஷிக் தன்னை காவலர் என அறிமுகப்படுத்திக் கொண்டு காலையில் வந்து பணம் தருவதாக தெரிவித்துள்ளார். செல்வசிவம் சரியெனக் கூடிய நிலையில் சிறிது நேரத்தில் முகமது பேடிஎம் மூலம் 50 ரூபாய் செலுத்தியுள்ளார். மீதம் நான்கு ரூபாவை செல்வ சிவா கேட்க இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. மீண்டும் paytm ஸ்கேனரை காண்பிக்குமாறு முகமது ஆசிக் கேட்க செல்வ சிவாவும் பேடிஎம் ஸ்கேனர் எடுத்துக்காட்டி இருக்கின்றார். அப்போது திடீரென பேடிஎம் ஸ்கேனரை பறித்துக்கொண்ட காவலர் செல்வ சிவாவின் மீது தூக்கி எறிந்ததில் செல்வ சிவாவின் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. கடையிலிருந்து வெளியே வருமாறு செல்வ சிவாவை காவலர் அழைத்துள்ளார். வெளியே வந்த செல்வ சிவாவினை தாக்கிய போது அவரது காதை கடித்துள்ளார்.
இதனால் வலியால் துடித்த செல்வ சிவா உடனடியாக தனது தந்தைக்கு தகவல் தெரிவித்துள்ள நிலையில் காவலரை அவரது நண்பர்கள் அழைத்து சென்றுள்ளார்கள். தகவலின் பெயரில் விரைந்து வந்து செந்தில்குமார் தனது மகனை கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் மருத்துவர்கள் செல்வ சிவாவுக்கு சிகிச்சை அளித்து வருகின்றார்கள். மேலும் இது தொடர்பாக காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் தமிழ்நாடு சிறப்பு காவல் படை காவலர் முகமது ஆஷிக் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.