ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அபுதாபி மீது நடத்திய ட்ரோன் தாக்குதலையடுத்து கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்துள்ளது.
ஏமன் நாட்டை சார்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அபுதாபி மீது அதிபயங்கர தாக்குதலை நடத்தியுள்ளார்கள். இந்த தாக்குதலினால் கச்சா எண்ணெயை வினியோகம் செய்வதில் சிக்கல் ஏற்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
இந்நிலையில் கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்துள்ளது. இந்த கச்சா எண்ணெயின் விலை அதிகரித்துள்ளதால் இந்தியாவுக்கு மிக கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.