ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் கடந்த சில நாட்களாகவே கொரோனா தொடர்ந்து அதிகரித்து வருகிறது
சீனாவில் முதன் முதலாக கண்டறியப்பட்ட கொரோனா பல உரு மாற்றங்களைப் பெற்று உலகையே அச்சுறுத்தி வருகிறது. இவ்வாறு இருக்க இந்தியா உட்பட சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் தற்போது மெதுவாக குறைந்து வருகிறது. ஆனால் ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அதன்படி ஜெர்மனியில் ஒரே நாளில் மட்டும் 67,500 க்கும் மேலானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் பிரான்சில் ஒரேநாளில் 29,455 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. மேலும் இங்கிலாந்தில் கடந்த ஒரு வாரத்தில் 5,87,000 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.