தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வரும் சுந்தர் சி காபி வித் காதல் என்ற திரைப்படத்தை தற்போது இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஜெய், ஜீவா, ஸ்ரீகாந்த், ஐஸ்வர்யா தத்தா, சம்யுக்தா, மாளவிகா சர்மா, அம்ரிதா ஐயர், ரைசா வில்சன், தொகுப்பாளனி டிடி, யோகி பாபு உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் போஸ்டர்கள் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இன்று டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது.
இந்த விழாவில் நடிகர்கள் ஜெய், சுந்தர் சி, குஷ்பூ உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு வந்த திவ்யதர்ஷினி வீல்சேரில் வந்தார். அவரை ஒருவர் பின்புறம் இருந்து தள்ளிக் கொண்டே வந்தார். இது தொடர்பான போட்டோ இணையத்தில் வெளியான நிலையில் டிடிக்கு என்ன ஆச்சு என ரசிகர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.