சூப்பர் மார்க்கெட்டில் நடந்த துப்பாக்கி சூட்டில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள வெர்ஜீனியா மாகாணத்தில் வால்மார்ட் சூப்பர் மார்க்கெட் ஒன்று அமைந்துள்ளது. இந்த சூப்பர் மார்க்கெட்டில் நேற்று இரவு ஊழியர்கள் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென சூப்பர் மார்க்கெட் மேலாளர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினார். இதில் படுகாயம் அடைந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதனையடுத்து அந்த நபர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த 7 பேரின் சடலத்தையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.