துருக்கியில் கடும் பனியில் சிக்கி தவித்த 200 க்கும் மேலானோரை மீட்புக்குழுவினர்கள் பத்திரமாக காப்பாற்றியுள்ளார்கள்.
துருக்கியிலுள்ள டியார்பகிர் என்னும் மாநிலத்தில் கடுமையாக பனிப்புயல் வீசியுள்ளது. இதனால் அங்குள்ள நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த 47 கார்களும், 1 பஸ்களும் உறைபனியில் சிக்கியுள்ளது.
அவ்வாறு சிக்கிய காரையும், பஸ்ஸையும் பனி கொஞ்சம் கொஞ்சமாக மூட தொடங்கியுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புக்குழுவினர்கள் பனியால் மூடப்பட்டிருந்த கார் மற்றும் பேருந்துகளில் சிக்கியிருந்த 200-க்கும் மேலானோரை மீட்டுள்ளார்கள்.