ஈரானிலுள்ள பூங்கா ஒன்றில் பராமரிப்பாளரை கொன்றுவிட்டு தப்பி சென்ற 2 சிங்கங்களை பாதுகாப்பு படையினர்கள் நீண்டநேர தேடுதல் வேட்டைக்கு பிறகு பிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரானிலுள்ள மர்காசி என்னும் மாநிலத்தில் உயிரியல் பூங்கா ஒன்று அமைந்துள்ளது. இந்த பூங்காவில் வளர்ந்து வந்த 2 சிங்கங்கள் திடீரென கூண்டிலிருந்து வெளியேறியுள்ளது. அந்த சமயம் சிங்கங்களுக்கு பராமரிப்பாளர் ஒருவர் உணவு கொண்டு வந்துள்ளார்.
அவ்வாறு உணவு கொண்டு வந்த அவரை பெண் சிங்கம் தாறுமாறாக தாக்கியுள்ளது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து அங்கிருந்து தப்பி சென்ற 2 சிங்கங்களையும் பாதுகாப்பு படை வீரர்கள் தீவிரமாக தேடி வந்துள்ளார்கள்.
இதை தொடர்ந்து நீண்ட நேர தேடுதலின் விளைவாக பாதுகாப்பு படையினர்கள் அந்த 2 சிங்கங்களையும் பிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.