Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே….! உக்ரைனில் ஒளிப்பதிவாளர் பலி…. நிருபர் காயம்…. பெரும் பரபரப்பு….!!!

உக்ரைனின் தனியார் பத்திரிகையாளர் நிறுவனத்தின் ஒளிப்பதிவாளர் பியர் ஜாக்ர்ஸெவஸ்கி உயிரிழந்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ரஷ்யா உக்ரைன் மீது 20-வது நாளாக போர் தொடுத்து வரும் நிலையில் பல்வேறு நாடுகள் போரினை நிறுத்த முயற்சித்து வருகிறது. இந்த நிலையில் கீவ் நகரின் வெளியே உக்ரைனின் தனியார் பத்திரிகையாளர் நிறுவனத்தின் ஒளிப்பதிவாளர் பியர் ஜாக்ர்ஸெவஸ்கி உயிரிழந்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தனியார் பத்திரிகையாளர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சூசான் ஸ்காட் கூறியதாவது. “கடந்த பிப்ரவரி மாதம் முதல் உக்ரைனில் லண்டனைச் சேர்ந்த செய்தி ஒளிப்பதிவாளர் பியர் ஜாக்ர்ஸெவஸ்கி மற்றும் இங்கிலாந்தை சேர்ந்த பெஞ்சமின் ஹால் வெளியுறவுத் துறை நிருபராக பணிபுரிந்து வந்துள்ளனர். இந்நிலையில் இவர்கள் சென்ற வாகனம் திங்கட்கிழமை அன்று கீவ் தலைநகர் வெளியே உள்ள ஹோரென்கா பகுதியில் நடந்த  தாக்குதலில் விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் ஜாக்ர்ஸெவ்ஸ்கி சம்பவ இடத்திலேயே  உயிரிழந்துள்ளார் மற்றும் ஹால் காயம் அடைத்துள்ளதாகவும் சிகிச்சைக்காக உக்ரைன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக” கூறியுள்ளார்.

Categories

Tech |