Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே!…. இலங்கையை போலவே பொருளாதார நெருக்கடியில் தள்ளாடும் பிரபல நாடு…. வெளியான தகவல்….!!!!

இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான நேபாளத்தில் இறக்குமதி உயர்வால் கடந்த ஆண்டு ஜூலை முதல் அந்நிய செலவாணி கையிருப்பு குறைய தொடங்கியுள்ளது. அதேபோல் ஏற்றுமதி மற்றும் சுற்றுலா துறைகள் மூலம் ஈட்டப்படும் வருவாயும் குறைய ஆரம்பித்துள்ளது. இந்த நாட்டின் அந்நிய செலவாணி கையிருப்பு கடந்த வருடம் ஜூலை மாதத்தில் ரூ.87 ஆயிரத்து 537 கோடியாக இருந்த நிலையில் இந்த வருடம் பிப்ரவரியில் ரூ.72 ஆயிரத்து 537 கோடியாக 17% குறைந்துள்ளது. அந்நிய செலவாணி கையிருப்பு போக போக அதிக அளவில் குறைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

நேபாள மத்திய வங்கியில் குறைந்தபட்சம் 7 மாதங்களாக இறக்குமதிக்கான அந்நிய செலவாணி கையிருப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது அது 6.7 மாதங்களாக குறைந்துள்ளது. இதனால் இலங்கையை போலவே நேபாளமும் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே நேபாள மத்திய வங்கி அத்தியாவசியமற்ற விலை உயர்ந்த ஆடம்பர பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதித்துள்ளது.

Categories

Tech |