தெலுங்கானாவில் இரண்டு இளம் ஆண்கள் குடி போதையில் ஒருவரை ஒருவர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சங்காரெட்டி மாவட்டத்தின் ஜோகிப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 21 வயது நபர், அண்மையில் மெடேக் மாவட்டத்தை சேர்ந்த 22 வயது ஆட்டோ ஓட்டுநரை திருமணம் செய்திருக்கிறார். முன்னதாக, இந்த இருவரும் துமாபலாபேட்டை கிராமத்தில் உள்ள மதுக்கடை ஒன்றில் சந்தித்துள்ளனர். அங்கு எதார்த்தமாக இருவரும் பேசித் தொடங்க, உடனடியாக அது நட்பாக மாறியது.இதைத் தொடர்ந்து, கடந்த மார்ச் மாதத்தில், ஜோகிநாத் குட்டா கோவிலில் 21 வயது நபருக்கு அந்த ஆட்டோ ஓட்டுநர் தாலி கட்டினார். ஆனால் போதை தெளிந்த பின் தாங்கள் செய்த காரியத்தை அறிந்து இருவரும் இரண்டு நாட்களில் பிரிந்தனர்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.