தர்மபுரி மாவட்டத்தில் வசித்து வந்த குட்டியப்பன் கடந்த வாரம் உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து அவரது உடலுக்கு இறுதி சடங்கு நடத்தப்பட்டு மயானத்தில் புதை புதைக்கப்பட்டது. இந்த நிலையில் மயானத்தில் புதைக்கப்பட்ட குட்டியப்பனின் உடலுக்கு ஈம சடங்கு செய்வதற்காக அவரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மயானத்திற்கு சென்றுள்ளனர். இவர்கள் அனைவரும் ஈமச்சடங்கு செய்யும் போது ஊதுபத்தியை ஏற்றியுள்ளனர்.
இந்த ஊதுபதியிலிருந்து வெளிவந்த அதிகப்படியான புகை அருகில் உள்ள மரத்தில் கூடுகட்டி வசித்து வந்த தேனீக்கள் மீது பட்டுள்ளது. இதனால் தேனீக்கள் கூட்டிலிருந்து வெளியே வந்து ஈமச்சடங்கு செய்ய வந்த உறவினர்களை விடாது துரத்தி கொட்டியுள்ளது. இதில் 50 பேருக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மேல் சிகிச்சைக்காக 30க்கும் மேற்பட்டோர் தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.