போதைப்பொருள் ஆய்வகங்களின் மீது வெடிகுண்டு வீசுவது குறித்து டொனால்ட் டிரம்ப் ஆலோசித்ததாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்கா நாட்டின் டொனால்ட் டிரம்ப் 2017 முதல் 2021 ஆம் ஆண்டு வரை அதிபராக இருந்தவர் . இவர் அதிபராக இருந்த போது அமெரிக்காவில் மார்க் எஸ்பர் பாதுகாப்பு செயலாளராக இருந்தார். இவர் தற்போது எழுதிய புத்தகத்தில் பகீர் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “2020 ஆம் ஆண்டில் மெக்சிகோவில் உள்ள போதைப்பொருள் மருந்து ஆய்வகங்களை அழிக்க இராணுவ ஏவுகணைகளை ஏவ முடியுமா” என்று டிரம்ப் இரண்டு முறை தன்னிடம் ஆலோசனை செய்ததாக அவர் கூறியுள்ளார்.
மேலும் இந்த வெடிகுண்டுகளை வீசிவிட்டு பின்னர் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல என்று கூறிவிடலாம் என டிரம்ப் கூறியதாக மார்க் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து மார்க் எஸ்பர் தெரிவித்துள்ள இந்த தகவல் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டிரம்ப் அதிபராக இருந்த சமயத்தில் இனவெறி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை அடக்குவதற்காக இராணுவத்தை அனுப்ப முடியாது என மார்க் எஸ்பர் டிரம்பை பகிரங்கமாக எதிர்த்துள்ளார். அப்போது இருந்து இருவருக்குமான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.