பாகிஸ்தானின் முல்தானிலுள்ள நிஷ்தார் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் மேற்கூரையில் கண்டெடுக்கப்பட்ட நூற்றுக்கணக்கான உடல்கள் குறித்து விசாரிக்க இன்று பல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அழுகிய நிலையில் கிடந்த உடல்கள் அனைத்தும் கைவிடப்பட்ட அல்லது உரிமை கோரப்படாத சடலங்கள் என கூறப்படுகின்றது. இதனை அடுத்து 500-க்கும் மேற்பட்ட சடலங்கள் என கூறப்படும், இந்த திகிலூட்டும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கு சிதைந்த உடல்கள் மருத்துவமனை கட்டிடத்தின் மேல் தளத்தில் தரையிலும் பழைய மரக் கட்டில் மீதும் வீசப்பட்டு கிடந்தன.
இதனை தொடர்ந்து சில உடல்கள் கடுமையாக சிதைந்து, கழுகுகள் கொத்தப்பட்டு கிடந்ததாக கூறப்படுகின்றது. இந்நிலையில், பஞ்சாப் அரசு 6 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது . அதே சமயத்தில் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த 3 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளார். மேலும் பஞ்சாப் முதல்வர் சவுத்ரி பர்வேஸ் இலாஹி இந்த விவகாரத்தை கவனத்தில் கொண்டு, சிறப்பு சுகாதார மற்றும் மருத்துவக் கல்வித் துறைக்கான மாகாண செயலாளரிடம் அறிக்கை ஒன்றை கோரியுள்ளார்.