அஜித் ரசிகர்களுடன் சேர்ந்து விஜய் ரசிகர்களும் ப்ளு சட்டை மாறனுக்கு எதிராக கிளம்பயுள்ளனர்.
நடிகரும் பத்திரிகையாளருமான ப்ளூ சட்டை மாறன் படங்களை கடுமையாக விமர்சித்து வருகின்றார். இவர் இயக்குனர்கள், நடிகர்கள் என யாரையும் விட்டுவைக்காமல் அனைவரையும் விமர்சனம் செய்து வருகின்றார்.இவர் முன்னணி நடிகர்களையே பெரும்பாலும் விமர்சித்து வருகின்றார். இந்நிலையில் அண்மையில் வெளியான அஜித்தின் வலிமை திரைப்படத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதில் உருவ கேலி செய்து விமர்சித்ததற்கு ரசிகர்கள் உட்பட திரைப்பிரபலங்கள் வரை பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து அஜித்தின் நெகடிவ் கமெண்ட்களை தேடி தேடி அவரின் ரசிகர்களை விமர்சித்து பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில் ப்ளூ சட்டை மாறன் நேற்று இரவு பிவிஆரி தியேட்டருக்கு படம் பார்க்க சென்ற அவரை அஜித் ரசிகர்கள் தாக்கிய சில போட்டோக்களுடன் தகவல் பரவியது. மேலும் அவர் தான் தாக்கப்பட்டதால் அங்கிருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து விஜய், அஜித் ரசிகர்கள் ஒன்று சேர்ந்து ப்ளூ சட்டை மாறன் பீஸ்ட் படத்தை பார்க்கவரக் கூடாது என்றும் அவரை எங்கு பார்த்தாலும் தாக்க வேண்டும் என்றும் அறிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ப்ளூ சட்டை மாறனை அஜித் ரசிகர்கள் தாக்கிய போட்டோவை பார்த்து விஜய் ரசிகர்கள் தளபதி சார்பாக 4 அடி சேர்த்துக் கொடுங்கள் என்று கூறி வருகின்றனர்.