நடிகர் அஜித் மற்றும் இயக்குனர் சங்கர் இணையாததற்கான காரணம் குறித்து பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் வலிமை. அஜித்தின் திரைப்படங்கள் கடந்த இரண்டு வருடங்களாக வெளியாகாத நிலையில் பிப்ரவரி 24-இல் வெளியாகியது. இதை ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். எச்.வினோத் இயக்கிய இத்திரைப்படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார். இத்திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இருப்பினும் சில விமர்சனங்களையும் பெற்றிருக்கத்தான் செய்கின்றது. இந்நிலையில் ஷங்கர் முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்குகிறார். ஆனால் அஜீத்-ஷங்கர் கூட்டணி இதுவரை இணையாத காரணத்தை பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் வீடியோ ஒன்றில் கூறியிருக்கின்றார்.
அவர் கூறியுள்ளதாவது, “ஜீன்ஸ் திரைப்படத்தில் முதலில் அஜீத்தான் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமானார். இத்திரைப்படமானது மூன்று நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றது. படப்பிடிப்பின்போது அஜித் மற்றும் சங்கருக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளது. இதனிடையே ஜீன்ஸ் திரைப்படம் இடையிலேயே நின்று போனது. பிறகு சங்கர் பிரசாந்தை வைத்து திரைப்படத்தை இயக்கிநார். இத்திரைப்படமானது பிரம்மாண்டமாக வெளியாகி மாபெரும் வெற்றி பெற்று பாக்ஸ் ஆஃபிஸில் இடம்பெற்றது. ஆனால் அஜீத் எந்தவித பிரமாண்டத்தையும் விரும்பாதவர் அவர் எளிமையையே விரும்புபவர். அஜித் நடிக்கும் படத்தின் இசை வெளியீட்டு விழா, ப்ரமோஷன் உள்ளிட்ட எதிலும் கலந்து கொள்ள மாட்டார். அதை கொள்கையாகவே வைத்துள்ளார். இருவரும் வேறு வேறு கொள்கையில் உள்ளவர்கள். அதனால்தான் அஜித்-ஷங்கர் இயக்கத்தில் நடிக்கவில்லை என்று பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.