அஜித்தை ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் செய்ததற்கு ரசிகர்கள் விளாசி வருகின்றார்கள்.
தமிழ் சினிமா உலகில் ஆண்டி இந்தியன் திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ப்ளூ சட்டை மாறன். இவர் எந்த நடிகர்களின் திரைப்படம் வெளியானாலும் தனது யூடூப் சேனல் மூலமாக தனது விமர்சனத்தை கூறிவிடுவார். இதனால் அவரை நெட்டிசன்கள் இணையத்தில் கழுவி கழுவி ஊற்றி வருகின்றார்கள். ஆனால் அவர் அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவார். அண்மையில் வலிமை திரைப்படம் ரிலீஸ் ஆன பொழுது அஜித்தை தரக்குறைவாக விமர்சனம் செய்திருந்தார்.
இதனால் அஜித் ரசிகர்கள் மற்றும் பொதுவானவர்கள் பலரும் அவரை விளாசினார்கள். அப்பொழுதும் அவர் தொடர்ந்து ரஜினி, கமல், பார்த்திபன் உள்ளிட்ட அனைவரையும் வம்பு இழுத்து வருகின்றார். அண்மையில் ரஜினி உருக்கமாக பேசியதை நக்கலடித்து பதிவிட்டார் ப்ளூ சட்டை. இதற்கு ரசிகர்களிடையே அவர் வாங்கி கட்டிக் கொண்டார்.
இந்த நிலையில் அஜித்தை வம்பு இழுத்து வருகின்றார் ப்ளூ சட்டை. அது என்னவென்றால் நேற்று முன்தினம் திருச்சி சென்ற அஜித்தை காண ரசிகர்கள் ஏராளமானோர் குவிந்தார்கள். இதனால் தனது வீட்டு மொட்டை மாடியில் இருந்து ரசிகர்களுக்கு கை அசைத்தார். இது இணையத்தில் வெளியானது. இதற்கு ப்ளூ சட்டை தனது ட்விட்டர் பக்கத்தில் ரீடுவிட் செய்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, தானே கையசைத்த அஜித், ரசிகர்கள் உற்சாகம் என கேப்சன் செய்திருந்தார். இதை பார்த்த அஜித் ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் அவரை கழுவி கழுவி ஊற்றி வருகின்றார்கள்.