அஜித்துக்காக சுதா கொங்கரா நல்ல கதையை வைத்துள்ளார் என்று ஜிவி பிரகாஷ் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவர் இயக்குனர் வினோத் இயக்கத்தில் அடுத்தடுத்து திரைப்படங்களில் கமிட் ஆகியுள்ளார். அஜித்தின் வலிமை திரைப்படம் அண்மையில் வெளியாகியது. இத்திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது ஏகே 61 திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இத்திரைப்படத்தின் ஷூட்டிங் கூடிய விரைவில் ஹைதராபாத்தில் தொடங்க உள்ளது. இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் அஜித்தின் அடுத்த திரைப்படம் குறித்து டுவிட்டரில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
Q: Bro anything about Ajith – GVP – Sudha #AskGV
– @itxOtaku— G.V.Prakash Kumar (@gvprakash) March 5, 2022
அதில் அஜித்துக்காக சுதா கொங்கரா கதை எழுதி வைத்திருக்கிறார் என்று கூறியுள்ளார். “நிச்சயமாக இது திரைப்படத்திற்கான வாய்ப்புகள் இருக்கின்றது. அது நடக்கும்போது பயங்கரமாக இருக்கும். அது நல்ல கதையாக இருக்கும். சுதா கொங்கரா முன்னணி இயக்குனர்களில் ஒருவர். கண்டிப்பாக அவர் அஜித்துக்கு நல்ல கதையை வைத்திருப்பார். இது நடந்தால் நன்றாக இருக்கும்” என்று கூறியுள்ளார் ஜிவி பிரகாஷ்.