டிக் டாக் செயலியில் தனது பயணத்தைத் தொடங்கி தமிழ்நாடு முழுவதும் ஒரு காலத்தில் விமர்சிக்கப்பட்டவர்தான் ஜி.பி.முத்து. துவக்கத்தில் வெறுத்தவர்கள் அனைவரையும் தனது ரசிகர்களாக்கி கோலோச்சி வருகிறார் இவர். டிக் டாக் முடக்கப்பட்டதை தொடர்ந்து யூடியூபில் கலக்கியவர் தற்போது பிக் பாஸில் நுழைந்தார். ஆனால் தன்னுடைய சொந்த காரணத்தின் காரணமாக வீட்டை விட்டு வெளியேறினார். வீட்டை விட்டு வெளியேறிய ஜிபி முத்துவுக்கு பல்வேறு பட வாய்ப்புகள் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், இணைய பிரபலம் ஜி.பி.முத்து, அஜித்தின் ஏகே 62-வில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டிசம்பரில் தொடங்கும் அஜித்தின் ‘ஏகே 62’ படத்திற்கு விக்னேஷ் சிவன் ஏற்கனவே நடிகர்களை இறுதி செய்துவிட்டார். சமீபத்திய செய்தியாளர் சந்திப்பில், அஜித்தின் அடுத்த படம் குறித்து குழுவினருடன் பேசி வருவதாக ஜி.பி.முத்து தெரிவித்தார். படத்தில் அவரது கதாபாத்திரம் காமெடி சாயலில் இருக்கும் எனக் கூறப்படுகிறது.