அஜித்தின் 61ஆவது திரைப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் துவங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான அஜித், வினோத், போனிகபூர் கூட்டணியில் வெளியான நேர்கொண்டபார்வை நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து இக்கூட்டணி வலிமை படத்திலும் தொடர்ந்தது.
இதே கூட்டணி அஜித்தின் 61வது படத்திலும் 3வது முறையாக இணைய உள்ள நிலையில் படத்தின் படபிடிப்பானது ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் ஆரம்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. அனிருத் இசையமைக்க லைகா நிறுவனம் இப்படத்தை தயாரிக்கின்றது குறிப்பிடத்தக்கது.