அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் வலிமை. இந்த படத்தில் ஹூமா குரேஷி, கார்த்திகேயா, யோகிபாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படம் தீபாவளிக்கு ரிலீஸாகும் என கூறப்பட்டது. இந்நிலையில் வலிமை படத்தின் ரிலீஸை தள்ளிவைக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள அண்ணாத்த படம் வருகிற நவம்பர் 4-ஆம் தேதி தீபாவளி தினத்தில் தியேட்டர்களில் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணாத்த, வலிமை ஆகிய படங்கள் ஒரே நேரத்தில் ரிலீஸானால் வசூல் ரீதியாக பாதிப்பு வரும் என கருதி வலிமை படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மேலும் வருகிற டிசம்பர் மாதம் வலிமை படம் வெளியாகும் என கூறப்படுகிறது.