வலிமை படத்தில் எழுந்த கேள்விக்கு விநியோகஸ்தர் பதிலளித்துள்ளார்.
தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகரான அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் வலிமை. யுவன் சங்கர் ராஜா இசை அமைத்த இந்தப்படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார். அஜித்தின் திரைப்படங்கள் இரண்டு வருடங்களாக வெளியாகாத நிலையில் ரசிகர்கள் இத்திரைப்படத்திற்கு பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில் பிப்ரவரி 24ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும் சில விமர்சனங்களையும் பெற்றிருக்கத்தான் செய்கின்றது.
இந்தப் படம் வசூலில் நல்ல சாதனை கிடைத்துள்ள நிலையில் இத்திரைப்படம் வெற்றி படமா? இல்லை தோல்வியா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு பதில் கூறும் விதமாக தமிழ் சினிமா பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம் கூறியுள்ளார். அவர் கூறியுள்ளதாவது, “வலிமை திரைப்படத்திற்கு எழுந்த விமர்சனங்களைப் பற்றி கவலையில்லை. என்னதான் எதிர்மறை விமர்சனங்களை பெற்றிருந்தாலும் வசூல் அளவில் பல கோடிகளை தட்டிச் சென்றுள்ளது. இதனால் வலிமை படம் விமர்சனங்களையும் மீறி ஒரு வெற்றிப்படமாக அமைந்து இருக்கின்றது” என்று கூறியுள்ளார். இதனை ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகிறார்கள்.